கடலூர்: கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் உயிரிழப்புக்கு கேட் கீப்பரே காரணம் என்றும், குடித்துவிட்டு கேட்டை மூடாமல் தூங்கியதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் இந்த விபந்து நடந்துள்ளது.
![]() |
கடலூர் ரயில்வே கேட்கீப்பர்
வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி, ஒரு மாணவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால், வேன் தண்டவாளத்தை கடந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சமும், பலத்த காயமடைந்த மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சமும். லேசாக காயமடைந்த மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என்றும், குடித்துவிட்டு தூங்கிய கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் ரயில் வரும்போதெல்லாம் ஊழியர் கேட் போடுவது வழக்கம். ஆனால், இதற்கு முன்பு இதேபோல 3 முறை கேட் போடப்படாமல் இருந்தது. இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அறிவுறுத்தியதையடுத்து கேட் போடப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை ரயில்வே கேட்டை மூடாததால் அவ்வழியாக வந்த பள்ளி வேன் மீது 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல நொறுங்கியது. வேனில் பயணம் செய்த மாணவர்கள் 4 பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இரண்டு பேர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நேரிட்டபோது இப்பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் மாணவர்களை மீட்கச் சென்றபோது மின்சாரம் தாக்கியதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம். குடித்துவிட்டு தூங்கியதால் இந்த அசாம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. தானியங்கி தொழில்நுட்பம் பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விபத்து நடப்பதற்கு காரணமான ஊழியர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மத்திய அரசும், மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஆளில்லாத கேட், ஓட்டுநரே கேட்டை திறந்ததாக தவறான தகவல் பரவி வருகிறது. ஊழியரின் அலட்சியப் போக்கே விபத்துக்கு முக்கிய காரணம் என்று கூறினர்.
0 comments:
Post a Comment